moneytwice.in

What is Affiliate Marketing? A Step-by-Step Guide for Beginners

What is Affiliate Marketing?

Affiliate Marketing என்பது, மற்றவர்கள் தயாரித்த அல்லது விற்பனை செய்யும் பொருட்கள்/சேவைகளை நீங்கள் பரிந்துரை செய்வதன் மூலம் வருமானம் ஈட்டும் ஒரு முறை. நீங்கள் வழங்கும் சிறப்பு (affiliate) லிங்க் வழியாக யாராவது அந்தப் பொருளை வாங்கினால், அதற்கான ஒரு கமிஷனை நீங்கள் பெறுவீர்கள். வாங்குபவருக்கு கூடுதல் செலவு எதுவும் இல்லை.

இது ஒரு “மத்தியஸ்தர்” பாணி வருமானம் — நீங்கள் வாடிக்கையாளரை கொண்டு வருகிறீர்கள், நிறுவனம் அதற்கான நன்றியாக உங்களுக்கு பணம் தருகிறது.

இது இன்று பலரும் பயன்படுத்தும் passive income (செயலில்லா வருமானம்) முறையாக இருக்கிறது, குறிப்பாக பிளாக்கர்கள், யூடியூபர்கள், மற்றும் சமூக ஊடக கன்டென்ட் கிரேட்டர்ஸ்.

நீங்கள் சொந்தமாக எந்தப் பொருளையும் உருவாக்க தேவையில்லை, வாடிக்கையாளர் சேவையையும் கவனிக்க வேண்டியதில்லை — நீங்கள் நம்பும் ஒரு நல்ல பொருளை பரிந்துரைத்தாலே போதும்!

🔹 ஏன் Affiliate Marketing ஒரு நல்ல வருமான வாய்ப்பாக இருக்கிறது?

இன்றைக்கு affiliate marketing ஆனது அதிகமாக பரவலாகவும், நம்பிக்கையான வருமான முறையாகவும் வளர்ந்துள்ளது. இதற்கான முக்கிய காரணங்கள்:

  1. குறைந்த முதலீடு: உங்களிடம் பெரிய முதலீடு தேவையில்லை. ஒரு blog அல்லது YouTube சேனல், கணிசமான followers இருக்கும் சமூக ஊடக கணக்கு போதும், அதில் நம்பிக்கையுடன் பயனாளருக்கு உதவும் கன்டென்ட் தொடர்ந்து கொடுத்தால் அதன் மூலம் வருமானம் உருவாகும்.
  2. Passive Income வாய்ப்பு: நீங்கள் தூங்கிக்கொண்டிருக்கும்போதும், உங்கள் affiliate லிங்க் மூலம் ஒருவர் வாங்கினால் உங்களுக்கு பணம் வரும்.
  3. எங்கே இருந்தாலும் வேலை செய்யலாம்: நீங்கள் வீடிலிருந்தும், அல்லது வேறு எந்த இடத்திலிருந்தும் இணையத்தின் வழியே வேலை செய்யலாம்.
  4. வாடிக்கையாளர் சேவையை கவலைப்பட வேண்டியதில்லை: நீங்கள் ஒரு பொருளை விற்பனை செய்யவில்லை, வேறு நிறுவனத்தின் லிங்க் மட்டுமே பகிர்கிறீர்கள். அதனால் returns, complaints போன்றவை உங்கள் பக்கம் வராது அதனை சம்பந்தப்பட்ட நிறுவனமே பார்த்து கொள்வார்கள்.
  5. பல வகையான பொருட்களை பரிந்துரை செய்யலாம்: புத்தகங்கள், மொபைல், ஆன்லைன் கோர்ஸ்கள் என உங்கள் ஆர்வத்திற்கு ஏற்ப பல தயாரிப்புகளை தேர்ந்தெடுக்கலாம்.

நீங்கள் தங்களது நேரத்தையும் சற்றே பொறுமையையும் ஒதுக்க தயாராக இருந்தால், affiliate marketing ஒரு சிறந்த part-time அல்லது full-time வருமானமாக வளரும்.

How to Start Affiliate Marketing?

🔹 Step 1: Choose a Profitable Niche

Niche என்பது ஒரு குறிப்பிட்ட category அல்லது topic சம்பந்தப்பட்ட விஷயங்களை பற்றிய விவரங்களை விவரிப்பது. Affiliate Marketing செய்வதற்கு மிக முக்கியமானது இந்த niche, இதை சரியாக தேர்ந்தெடுத்து அதற்கேற்ப கன்டென்ட் தயார் செய்ய வேண்டும். தற்போது பிரபலமாக இருக்கும் niche topics பற்றி பார்க்கலாம்.

உங்கள் தனிப்பட்ட interest எதில் உள்ளதோ அதை தேர்ந்தெடுத்து அதற்கான டிமாண்ட் மற்றும் கமிசின் தற்போது எவ்வளவு உள்ளது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

🔹 Step 2: Find and Join an Affiliate Program

நாம் ஏற்கெனவே பார்த்தது போல Affiliate Marketing என்பது நீங்கள் ஒரு நிறுவனத்தின் சேவை அல்லது பொருளை ப்ரொமோட் செய்து அதற்கான கமிசின் பெறுவது. தற்போது நமக்கு தெரிந்த பெரும்பாலான நிறுவனங்கள் Affiliate Marketing சேவையை தருகின்றன அதில் குறிப்பிட்ட சிலவற்றை பற்றி பார்க்கலாம்.

Amazon வழங்கும் Affiliate Program beginners-க்கு மிகவும் ஏற்றது. Amazon Affiliate என்ற இணையத்தளத்தில் உங்கள் அக்கௌன்ட் பதிவு செய்யுங்கள், அதில் எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு கமிசின் என்று கொடுக்கப்பட்டிருக்கும் அதை பொறுத்து உங்கள் niche பொருளை தேர்வு செய்தால் அதற்கான Affiliate லிங்க் கிடைக்கும் அதை உங்கள் blog, YouTube, Instagram மற்றும் இதர சமூக வலைத்தளங்களில் பகிருங்கள்.

Amazon போலவே பிளிப்கார்ட்டிலும் அக்கௌன்ட் ரெஜிஸ்டர் செய்து product லிங்க் பெற்று ப்ரொமோட் செய்யலாம். இந்த இரண்டிற்கும் கமிசின் தொகை மட்டும் மாறுபடும்.

web development மற்றும் blogging துறையில் இருப்பவர்களுக்கு இந்த Affiliate Program மிகவும் உதவியாக இருக்கும். web development செய்பவர்கள் உங்கள் clientக்கு இந்த Affiliate மூலம் வெப்சைட் செய்து கொடுத்து கமிசின் பெறலாம். Bloggers மற்றும் youtubers Affiliate லிங்க் ப்ரொமோட் செய்து சம்பாதிக்கலாம்.

இது போல இன்னும் நிறைய நிறுவனங்கள் Affiliate Program வழங்குகின்றன. அதுமட்டும் இல்லாமல் நேரடி நிறுவனுங்களும் இந்த சேவை கொடுக்கின்றன உதாரணமாக Samsung நிறுவனம் கொடுக்கும் Affiliate லிங்க் மூலம் உங்களுக்கு கமிசின் இல்லாமல் rewards points கிடைக்கும் அதை நீங்கள் samsung-ன் ஏதேனும் product வாங்கும் போது redeem செய்து கொள்ளலாம். Beauty Products, Fitness, Technology, Fashion இப்படி அனைத்து பிரிவிலும் முன்னணி நிறுவனங்கள் இந்த Affiliate Program கொடுக்கின்றன.

🔹 Step 3: Create a Platform to Promote Your Links

இது தான் முக்கியமானது உங்கள் Affiliate லிங்க் நீங்கள் ப்ரொமோட் செய்வதற்கான தளத்தை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். இதில் உங்களுக்கு நிறைய options உள்ளது ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

ஒரே நேரத்தில் பல்வேறு வகையில் சம்பாதிக்க இது ஒரு சிறந்த வழி. நீங்கள் Blog/Website உருவாக்கி அதில் யூசர்ஸ்க்கு ஏற்ற கன்டென்ட் தொடர்ந்து பதிவிட்டு நல்ல வெப்சைட் டிராபிக் கொண்டு வந்ததும் உங்கள் Affiliate லிங்க் மூலம் சேல்ஸ் நடக்க அதிக வாய்ப்புள்ளது. இதன் மூலம் நீங்கள் தொடர்ந்து passive income பெறலாம்.

Affiliate Marketing செய்வதற்கும் youtube ஒரு சிறந்த தேர்வு. உங்கள் youtube சேனலில் product ரெவியூஸ், கம்பேரிசன் மற்றும் டுடோரியல் கன்டென்ட் மூலம் Affiliate Marketing செய்தால் conversion அதிக அளவில் கிடைக்கும்.

Social Media தான் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது. இதை சரியாக பயன்படுத்துபவர்கள் பல வழிகளில் சம்பாதிக்கிறார்கள். உங்கள் Instagram, Facebook, X இது போன்ற Social Media தளத்தில் audience க்கு ஏற்றார் போல கன்டென்ட் பதிவு செய்து followers எண்ணிக்கை உயர்த்த வேண்டும். குறிப்பிட்ட எங்கேஜ்மெண்ட் உங்கள் அக்கவுண்டில் வந்ததும் affiliate லிங்க் ஷேர் செய்யுங்கள்.

நீங்கள் அதிக research மற்றும் உழைப்பை கொடுக்க வேண்டியது இந்த நிலையில் தான். உங்கள் affiliate லிங்க் மூலம் purchase செய்வதற்கு முதலில் யூசர் வேண்டும் அதற்கு நீங்கள் யூசர்க்கு பயன்படும் வகையிலான கன்டென்ட் கொடுக்க வேண்டும். இந்த Marketing துறையில் உங்களுக்கு ரிசல்ட் கிடைக்க கொஞ்சம் கால தாமதம் ஆகும் அதற்கான நேரத்தை கொடுத்து தொடர்ந்து உழைக்கும் போது அதற்கான பலன் உங்களுக்கு அதிகமாக கிடைக்கும்.

🔹 Step 6: Track, Optimize & Scale Your Affiliate Business

இது தான் உங்களுடைய கடைசி நிலை. உங்கள் affiliate லிங்க் மூலம் சேல்ஸ் வந்ததும் அதை கவனிக்காமல் விடாமல் தொடர்ந்து கவனிக்க வேண்டும். நீங்கள் எந்த affiliate program இல் இருக்கிறீர்களோ அதில் உங்களுக்கு ஒரு டாஷ்போர்டு கொடுக்கப்பட்டிருக்கும் அதில் அவ்வளவு கிளிக்ஸ் வந்துள்ளது, எவ்வளவு conversion வந்துள்ளது என்பதை கவனிக்க வேண்டும். இதன் மூலம் எந்த மாதிரியான கன்டென்ட் யூசர்க்கு பிடிக்கிறது என்பதை அறிந்து அதேபோல தொடர்ந்து பதிவிடலாம், மேலும் பழைய கன்டென்டை optimize செய்யலாம்.

🔹 அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQs)

1. ஒரு வலைத்தளமின்றி affiliate marketing தொடங்கலாமா?
ஆம், முடியும். YouTube, Instagram, WhatsApp போன்றவற்றிலும் affiliate லிங்க் பகிரலாம். ஆனால், வலைத்தளம் இருந்தால் நம்பிக்கையும் SEO மூலம் நீண்டகால பயனும் கிடைக்கும்.

2. எவ்வளவு பணம் சம்பாதிக்கலாம்?
அதற்கான வரம்பே இல்லை. சிலர் மாதத்திற்கு ₹500-₹1000 சம்பாதிக்கிறார்கள், மற்றவர்கள் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். இது உங்கள் niche, traffic, மற்றும் முயற்சியின் அடிப்படையில் மாறும்.

3. இந்தியாவில் affiliate marketing சட்டபூர்வமா?
ஆம்! இது முழுமையாக சட்டபூர்வமானது மற்றும் இந்தியாவில் அதிகமாக பயன்படுத்தப்படும் ஆன்லைன் வருமான வாய்ப்பாக இருக்கிறது.

Conclusion

இந்த Affiliate Marketing சரியாக பயன்படுத்த தெரிந்தவர்கள் லட்சங்களில் சம்பாதிக்கிறார்கள். தற்போது இருக்கும் AI பயன்படுத்தி எளிதாக கன்டென்ட் தயாரித்து வருமானம் பெறலாம். இன்னமும் இந்தியாவில் இந்த Affiliate Marketing துறையில் அதிக டிமாண்ட் உள்ளது. இதில் இருக்கும் இன்னொரு சிறப்பம்சம் உங்கள் லிங்க் மூலம் ஒருவர் அமேசான் வெப்சைட்க்கு சென்று கிளிக் செய்த பொருளை வாங்காமல் வேறு பொருளை வாங்கினாலும் கமிசின் கிடைக்கும். இன்னும் சில affiliate நிறுவனங்கள் அவர்கள் வெப்சைட்க்கு டிராபிக் வரவைப்பதற்கு கமிசின் கிடைக்கும். இன்னும் சில வெப்சைட்ஸ் அவர்கள் கொடுக்கும் லிங்க் மூலம் சென்று அவர்கள் signup செய்வதற்கு கமிசின் தருகிறார்கள். இது போல நிறைய வகைகள் உள்ளன அதில் உங்களுக்கு பிடித்த வகையில் Affiliate Marketing செய்யுங்கள் கண்டிப்பாக வெற்றி பெறலாம்.

Exit mobile version