சிறுதொழில் பற்றிய விரிவான விளக்கமும் அதில் இருக்கும் வாய்ப்புகள் பற்றியும் விரிவாக பார்க்கலாம். மேலும் சிறுதொழில் செய்வதற்கு தேவையான Small Business Ideas பற்றியும், என்னுடைய சுய அனுபவத்தில் நான் பார்த்த சிறுதொழில் செய்பவர்களின் அனுபவத்தையும் விரிவாக படிக்கலாம்.
Introduction
- இன்றைய பொருளாதார சூழ்நிலையில் சிறுதொழில் செய்வது எதனால் சிறந்த முடிவு
தற்போது சுயமாக சிறுதொழில் செய்யவேண்டும் என்ற எண்ணம் பலரது கனவாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் வருமானம் பற்றாக்குறை, வேலைவாய்ப்பின்மை, படிப்பிற்கு ஏற்ற வேலை இல்லாதது என்று நிறைய இருக்கிறது. இதனால் மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிறிய தொழில் தொடங்கி தங்கள் வருமான தேவையை பூர்த்தி செய்துகொள்ள விருப்பம் காட்டுகிறார்கள். குறிப்பாக தற்போது பெண்கள் சுயதொழில் செய்யும் விகிதம் அதிகம் ஆகி உள்ளது. அரசாங்கமும் தொழில்முனைவோரை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்களை அறிமுகபடுத்தி உள்ளனர்.
- சிறுதொழில் செய்வதில் இருக்கும் நன்மைகள் என்ன
உங்களிடம் மொபைல் மற்றும் இன்டர்நெட் தொடர்பு இருந்தால் போதும் சிறுதொழில் செய்ய முடியும். மிக குறைந்த முதலீடு அல்லது முதலீடே இல்லாமல் செய்யும் வாய்ப்பு உங்களுக்கு இதில் கிடைக்கிறது. நீங்கள் மாணவராக இருக்கலாம், வேளைக்கு செல்பவராக இருக்கலாம், வீட்டில் இருக்கும் பெண்களாக இருக்கலாம் யாராக இருந்தாலும் சிறுதொழில் துறையில் வாய்ப்புகள் கொட்டி கிடைக்கிறது. ஒரு வேலையை செய்து கொண்டே சிறுதொழில் செய்து சம்பாதிக்க முடியும்.
Types of Small Business Ideas
- ஆன்லைன் சார்ந்த சிறுதொழில்
- சேவை சார்ந்த சிறுதொழில்
- குறைந்த முதலீட்டு சிறுதொழில்
- பெண்களுக்கான சிறுதொழில்
இது போல இன்னும் நிறைய வகையான சிறுதொழில் வகைகள் உள்ளன அதில் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் சில தொழில்கள் பற்றி ஒவ்வொன்றாக விரிவாக பார்க்கலாம்.
- ஆன்லைன் சார்ந்த சிறுதொழில்
ஆன்லைன் மூலம் தொழில் செய்வதற்கு இப்போது பல வழிகள் இருக்கிறது. குறிப்பாக e-commerce துறையில் அமேசான், பிளிப்கார்ட், மீசோ போன்ற வெப்சைட்ஸ் மூலம் நீங்கள் seller ஆக பதிவு செய்து பொருட்களை விற்பனை செய்யலாம். மேலும் இன்ஸ்டாகிராம், யூடியூப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் உங்கள் தொழில் பற்றிய மார்க்கெட்டிங் கன்டென்ட் மூலம் விற்பனை செய்யலாம். தற்போது நிறைய பெண்கள் இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் மூலம் ஹேர் ஆயில், உணவு பொருட்கள், கிப்ட் பொருட்கள், டிரஸ் இப்படி அவர்களுக்கு பிடித்த பொருட்களை விற்பனை செய்து வீட்டில் இருந்தே சம்பாதிக்கிறார்கள்.
என்னுடைய தோழி நன்கு படிக்க கூடியவர், பள்ளி மற்றும் கல்லூரியில் அதிக மதிப்பெண் பெற்றவர். அதனால் அவருக்கு மாணவர்களுக்கு டியூஷன் எடுப்பதில் ஆர்வம் வந்தது, அவர் வீட்டிலேயே டியூஷன் நடத்தி அதன் மூலம் சம்பாதித்து கொண்டு வந்தார். அவரிடம் படித்த மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற்றதால் இன்னும் நிறைய மாணவர்கள் வந்து அவரிடம் சேர்ந்தனர். இந்நிலையில் என் தோழி அவரின் திறமையை புரிந்து கொண்டு Neet Exam க்கு படிக்கும் மாணவர்களுக்கு கோச்சிங் கொடுக்க ஆரம்பித்தார், சிலருக்கு வார இறுதியில் வீட்டிற்கே சென்று கோச்சிங் கொடுப்பது, சிலருக்கு ஆன்லைனில் வீடியோ கால் மூலம் கோச்சிங் கொடுக்க ஆரம்பித்தார். தற்போது அவருக்கு இதன் மூலமாக மட்டும் மாதம் 60 ஆயிரம் வரை வருமானம் வருகிறது.

Freelancing துறை தற்போது வெகுவாக வளர்ந்து வருகிறது. ஐடி, மார்க்கெட்டிங், டிசைன், கன்சல்டிங் இப்படி நீங்கள் இருக்கும் துறை எதுவானாலும் freelance துறையில் வாய்ப்பு உள்ளது. Fiverr, Upwork போன்ற வெப்சைட்ஸ் இந்த சேவையை தருகிறது. ஒரு skill தேர்ந்தெடுத்து அதை நன்கு கற்றுக்கொள்ளுங்கள் பின்பு இந்த வெப்சைட்ஸ் சென்று பதிவு செய்துகொண்டு அங்கே கொடுக்கப்பட்டிருக்கும் வேலைகளுக்கு அப்ளை செய்யுங்கள். Fiverr, Upwork இதில் கொடுக்கப்படும் வேலைகளை பெரும்பாலும் பாகிஸ்தான், ஸ்ரீலங்கா, பங்களாதேஷ் போன்ற நாட்டினரே செய்கின்றனர். இந்தியர்களின் எண்ணிக்கை இதில் மிகவும் குறைவே.
- சேவை சார்ந்த சிறுதொழில்
இந்த துறையில் தற்போது நிறைய தொழில் வாய்ப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. மக்களிடையே ஆன்லைன் உபயோகிக்கும் பழக்கம் இப்போது அதிகரித்துள்ளதால் இதை பயன்படுத்தி பல வழிகளில் தொழில் செய்ய முடியும். குறிப்பாக இன்ஸ்டாகிராம், யூடியூப்பில் வீடியோ பதிவிடும் இன்ப்ளூன்சர்கள் அதிகமாக பார்க்கிறோம். அவர்களுக்கு வீடியோ எடிட்டிங், ஸ்கிரிப்ட் ரைட்டிங், தம்ப்னைல் டிசைன் இது போன்றே வேலைகளை பிரீலான்சர் முறையில் செய்து கொடுப்பது தற்போது அருமையான தொழிலாக உள்ளது. மேலும் இந்த வேலைகளுக்கு நல்ல சம்பளமும் வழங்கப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் நிறுவனங்கள் தங்களது brand பொருட்களை மார்க்கெட்டிங் செய்வதற்கும் சமூக வலைத்தளங்களில் போஸ்ட் செய்கின்றன அவர்களுக்கும் இந்த பிரீலான்ஸ் வேலைகளை செய்து கொடுத்து சம்பாதிக்கலாம்.
என்னுடைய நண்பன் செய்யும் அற்புதமான பார்ட் டைம் வேலையை பற்றி பார்க்கலாம். சென்னையில் உள்ள குறிப்பிட்ட சில ஏரியாவில் இருக்கும் அபார்ட்மெண்ட்களுக்கு சென்று அங்குள்ள அபார்ட்மெண்ட் சங்கத்தில் பேசி சுத்தம் செய்வதற்கு தேவையான துடைப்பம், தரை மற்றும் டாய்லெட் கிளீனர் லிகுய்ட் இது போன்ற பொருட்களை கொடுக்கும் ஆர்டர் எடுப்பார் பின்பு அவருக்கு தெரிந்த மொத்த விலை கடையில் குறைந்த விலையில் வாங்கி நல்ல லாபத்திற்கு அபார்ட்மெண்டில் கொடுத்துவிடுவார். மாதம் ஒரு முறை சப்ளை செய்தால் போதும் இது போல 5 அபார்ட்மெண்ட் ஆர்டர் கிடைத்தாலே நல்ல லாபம் கிடைக்கும். மேலும் சிறு சிறு நிறுவனங்களுக்கும் இதே முறையில் ஆர்டர் எடுத்து கொடுத்தால் இன்னும் நல்ல வருமானம் பார்க்கலாம்.
- பெண்களுக்கான சிறுதொழில்
பெண்கள் இப்போது தொழில் செய்வதில் ஆர்வம் காட்டுவதை அதிகமாக பார்க்க முடிகிறது. அரசாங்கமும் பெண்கள் சுயதொழில் செய்வதற்காக நிறைய திட்டங்கள் மூலம் லோன் வசதி செய்து கொடுக்கிறார்கள். என்னுடைய உறவினர் பெண் ஒருவர் அரசாங்க வங்கியில் அக்கௌன்ட் ஓபன் செய்து சிறுதொழில் செய்வதற்கான லோன் 1 லட்ச ருபாய் வாங்கி மொத்த விலையில் துணிகள் வாங்கி அவர் இருக்கும் ஊரை சுற்றி உள்ள பகுதியில் பைக்கில் சென்று விற்று வந்தார். அதில் நல்ல லாபம் வந்ததும் வாங்கிய கடனை கட்டிமுடித்தார். பின்பு அதே வங்கியில் அவரை அழைத்து இன்னும் அதிக தொகையில் லோன் கொடுத்தார்கள் இப்போது அவர் இந்த தொழிலை நல்ல முறையில் செய்து வருகிறார்.
தையல் தொழில் அன்றிலிருந்து இன்று வரை டிமாண்ட் குறையாத ஒன்றாக இருந்து வருகிறது. இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸாப் இந்த இரண்டு ஆப் வைத்து வாடிக்கையாளர்களை பிடித்து அவர்களுக்கு துணி தைத்து விற்பனை செய்கிறார்கள். அதிலும் customize முறையில் துணி தைத்து கொடுப்பதால் இதில் நல்ல விற்பனை நடக்கிறது. குழந்தைகளுக்கு customize துணி தைப்பதில் இப்போது அதிகமாக வாய்ப்புகள் இருக்கிறது, பெரும்பாலான ஆன்லைன் வெப்சைட்டில் அதிக விலையில் விற்கப்படுகிறது இதை பயன்படுத்தி இந்த தொழிலை செய்யலாம்.
அமேசான், மீசோ மற்றும் பிளிப்கார்ட் போன்ற வெப்சைட்டில் விற்பனை செய்வது இப்போது எளிதாக இருக்கிறது, இதை பயன்படுத்தி கைவினை பொருட்கள், துணிகள், பொம்மைகள் இன்னும் நிறைய வகைகள் மூலம் விற்பனை செய்யலாம். தற்போது இந்த தளங்களில் வட இந்தியர்கள் அதிகமாக விற்பனை செய்கிறார்கள் அதன் காரணமாகவே சில பொருட்கள் ஆர்டர் செய்து 4 அல்லது 5 நாட்கள் கழித்து டெலிவரி செய்யப்படுகிறது. நீங்களும் இந்த வெப்சைட்டில் இணைந்து இதில் இருக்கும் தொழில் வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
- குறைந்த முதலீடு தொழில்கள்
தற்போது எலக்ட்ரிகல்,பிளம்பிங், AC மெக்கானிக் இது போன்ற வேலை செய்வதற்கு நகரங்களில் அதிக டிமாண்ட் இருக்கிறது. ஒரு ஏரியாவை தேர்ந்தெடுத்து அங்குள்ள வீடுகளில் உங்கள் விசிட்டிங் கார்டு கொடுத்து உங்களை பற்றி தெரியப்படுத்தலாம். குறிப்பாக அபார்ட்மெண்ட் இருக்கும் இடங்களில் உங்களை பற்றி தெரியப்படுத்தி வைத்தால் கண்டிப்பாக ஆர்டர் கிடைக்கும். இதை நான் என்னுடைய சொந்த அனுபவத்தில் இருந்தே சொல்கிறேன் ஒரு நாள் இரவு எங்கள் அபார்ட்மெண்டில் மெயின் EB போர்டுயில் ஏற்பட்ட பழுதை சரிசெய்ய உடனடியாக ஆள் கிடைக்கவில்லை சிலரிடம் விசாரித்து எலெக்ட்ரிசின் வரவளைதோம் அவர் ஒரு 15 நிமிடத்தில் வேலையை முடித்து 400 ரூபாய் வாங்கி சென்றார். இந்த வேலைகள் தெரிந்தவர்கள் இதை ஒரு பகுதி நேர வேலையாக செய்யலாம்.
Conclusion
AI வருகையால் டெக்னாலஜி வேகமாக வளர்ந்து வருகிறது அதனால் நிறைய தொழில்கள் அழிந்து வருகிறது சில தொழில்கள் உருவாகி வருகிறது. நீங்களும் இந்த டெக்னாலஜியை பயன்படுத்தி சிறு தொழில் செய்ய முயற்சி செய்ய வேண்டும் உதாரணமாக கன்டென்ட் எழுதுவது, கோடிங் செய்வது, ஸ்கில் டெவெலப் செய்வது, வெப் டிசைன் இப்படி ஏதேனும் ஒரு தொழிலை கற்றுக்கொண்டு செய்யவேண்டும். The right time to do is now இந்த வாக்கியம் தொழில் செய்ய நினைக்கும் ஒவ்வொருவருக்கும் உத்வேகம் கொடுக்கும் நீங்கள் செய்ய நினைக்கும் தொழிலுக்கான நல்ல நேரம் இப்போது தான். இனி வரும் காலங்களில் ரோபோடிக் பல்வேறு துறைகளில் வரவிருக்கிறது இதனாலும் பல வேலைகள் பறிக்கப்படலாம் எனவே டெக்னாலஜி வளர்வதற்கு ஏற்ப உங்களையும் நீங்கள் அப்கிரேட் செய்துகொள்ள வேண்டும். அடுத்து வரவிருக்கும் கட்டுரையில் மேலும் சில தொழில் சார்ந்த வாய்ப்புகளை பற்றி பார்க்கலாம்.
மேலும் ஆன்லைன் Money Making பற்றி தெரிந்து கொள்ள கிளிக் செய்யுங்கள்.