How to Make Money Online. ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி?

இன்றைய இன்டர்நெட் உலகில் ஆன்லைன்யில் பணம் சம்பாதிப்பது என்பது சாதாரணமாக ஆகி விட்டது. அதை சரியாக பயன்படுத்த கற்றுக்கொண்டவர்கள் வீட்டில் இருந்தபடியே லட்சங்களில் சம்பாதிக்கிறார்கள். ஆனால் பெரும்பாலான மக்கள் சமூக வலைதள பிடியில் சிக்கி நேரத்தை வீணாக ரீல்ஸ் பார்ப்பதற்கு செலவழிக்கின்றனர். இதை எல்லாம் தவிர்த்து இன்டர்நெட் சேவையை சரியாக பயன்படுத்தி எப்படி பணம் சம்பாதிப்பது என்பதை How to Make Money Online. ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி? என்ற இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

இன்டர்நெட் பயன்பாடு

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி இன்டர்நெட் இல்லாத துறையே இல்லை எனும் அளவிற்கு வளர்ந்துள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு கணக்கின்படி 5.56 பில்லியன் மக்கள் அதாவது உலக மக்கள் தொகையில் 67.9% பேர் இன்டர்நெட் பயன்படுத்துகின்றனர் இது 7.79 பில்லியன் ஆக 2029 முன்னே உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. அப்படியென்றால் இதில் உங்களுக்கு வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கிறது என்பதை காட்டுகிறது. நீங்கள் வேலைக்கு செல்பவராக இருந்தாலும் அல்லது மாணவராக இருந்தாலும் உங்கள் பகுதி நேரத்தை சரியாக பயன்படுத்தினால் ஆன்லைன் மூலமாக சம்பாதிக்கலாம்.

1.Blogging

Blogging ஒரு அற்புதமான Side Hustle என்று சொல்லலாம் ஏனென்றால் உங்களுக்கு பிடித்த ஒரு விஷயத்தை கட்டுரையாக எழுதுவது என்பது எளிதான வேலை. உலகம் முழுவதும் blog படிக்கும் மக்கள் ஏராளமாக இருக்கின்றனர். இந்தியாவில் இன்னும் blogging துறையில் நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. குறிப்பாக தமிழ் மொழியில் சினிமா, அரசியல், தொழில்நுட்பம் இதை பற்றிய blogs மட்டுமே பரவலாக இருக்கிறது. ஆனால் AI, EV, விண்வெளி, பிட்னெஸ், பிசினஸ் இப்படி நிறைய category எழுதப்படாமலே உள்ளது. நான் சமீபத்தில் பார்த்தது வட இந்தியாவில் இருக்கும் ஒருவர் தமிழ் மொழியில் motivational quotes வெப்சைட் வைத்திருப்பதை பார்த்தேன். இதில் இருக்கும் வாய்ப்பை அவர் சரியாக உபயோகப்படுத்தி கொண்டார். அதுபோல நீங்களும் blogging துறையில் இருக்கும் வாய்ப்பை பயன்படுத்தி சம்பாதிக்கலாம்.

2. Online Course

நீங்கள் ஏதேனும் ஒரு skill நன்கு தெரிந்தவராக இருந்தால் நீங்களும் online இல் course விற்கலாம். பலருக்கும் இருக்கும் சந்தேகம் மற்றவருக்கு கற்றுக்கொடுக்கும் அளவிற்கு என்னால் முடியுமா எனக்கு இந்த skill பற்றி முழுமையாக தெரியுமா என்பது தான். இந்த ஒரு தடுமாற்றத்தால் இங்கே பலபேர் தங்களுடைய திறமையை வெளிக்கொண்டு வராமலே இருக்கிறார்கள். இந்த தடுமாற்றத்தை ஒதுக்கிவிட்டு உங்களுக்கு தெரிந்த skill பற்றிய blog அல்லது youtube வீடியோ பதிவிடுங்கள். அந்த skill பற்றிய ஆர்வம் உள்ளவர்களுக்கு ஒரு course தயார் செய்து விற்பனை செய்யுங்கள். Udemy மற்றும் Coursera போன்ற வெப்சைட் பிரத்தியோகமாக online course விற்பதற்காகவே உள்ளது இதில் நீங்களும் creator ஆக இணைந்து உங்கள் course விற்கலாம். ஒரு முறை பதிவிடும் உங்கள் course மூலம் வாழ்நாள் முழுவதும் Passive Income கிடைக்கும்.

3. Amazon KDP

இது பலருக்கும் தெரியாத மிக முக்கியமான ஒரு ஆன்லைன் தொழில். அமேசான் நிறுவனத்தில் இருக்கும் KDP அதாவது Kindle Direct Publishing இதன் மூலம் புத்தகம் எழுதி அதை இந்த KDP இல் பதிவேற்றம் செய்து விற்பனை ஆகும் புத்தகத்திற்கு ராயல்டி கமிசின் பெறலாம். இதற்கு நீங்கள் எழுத்தாளராக தான் இருக்க வேண்டும் என்றில்லை இதில் கதை, இலக்கியம், கவிதை, கட்டுரை, வழிகாட்டி புத்தகம், Colouring புத்தகம், சிறுவருக்கான பாட புத்தகம் இப்படி பல வகையான புத்தகத்தை நீங்கள் பதிவேற்றலாம். இதற்கு நேரமெடுத்து நல்ல கன்டென்ட் தயார் செய்யுங்கள் அல்லது chatgpt போன்ற AI மூலம் கன்டென்ட் யோசனை பெற்று அதிலிருந்து உங்கள் சொந்த கன்டென்ட் தயார் செய்யுங்கள. பிறகு canva வெப்சைட் மூலம் உங்கள் புத்தகத்தின் முன்பக்க கவர் டிசைன் செய்து உங்கள் புத்தகத்திற்கான விலையை நிர்ணயம் செய்து பதிவேற்றுங்கள். இதோடு நிறுத்தாமல் amazon ads இல் உங்கள் புத்தகத்தை விளம்பரம் செய்தால் அதிக விற்பனை கிடைக்க வாய்ப்புள்ளது.

how to make money online

4. E-commerce

E-commerce இன் வளர்ச்சி தற்போது அபரிதமாக இருக்கிறது. மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யும் விகிதம் அதிகமாகியுள்ளது. அதேபோல அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற E-commerce வெப்சைட்யில் விற்பனை செய்யும் seller தேவையும் அதிகமாக இருக்கிறது. கைவினை பொருட்கள், customize பொருட்கள், வீட்டு அலங்கார பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் இவைகளுக்கு நல்ல டிமாண்ட் இருக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி நீங்களும் உங்களுக்கு ஒரு GST செர்டிபிகேட் அப்ளை செய்து அதன் மூலம் அமேசான், பிளிப்கார்ட் மற்றும் மீசோ வெப்சைட்யில் அக்கௌன்ட் ரெஜிஸ்டர் செய்துகொள்ளலாம்.

இதுமட்டும் இல்லாமல் உங்களுக்கென தனியாக E-commerce வெப்சைட் தொடங்கி அதன் மூலம் பொருட்களை விற்பனை செய்யலாம். இந்த இரண்டிற்கும் இருக்கும் வேறுபாடு அமேசான், பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் அனைத்து வேலைகளையும் அவர்களே செய்துவிடுவார்கள் உங்கள் வேலை உங்கள் பொருளின் புகைப்படம் மற்றும் இதர விவரங்களை உள்ளிட்டு ஆர்டர் வந்ததும் பேக் செய்து வைக்க வேண்டும் ஆனால் உங்கள் சொந்த E-commerce வெப்சைட்யில் அத்தனை வேலைகளையும் நீங்களே செய்யவேண்டியதாக இருக்கும்.

5. Selling Digital Products

Digital Products எனும் ஒரு கேடகரியில் பல வகைகள் இருக்கிறது. நீங்கள் இதை கற்றுக்கொண்டு இதில் Digital Products உருவாக்கி அதன் வழியே வருமானம் பெறலாம். Canva எனும் டிசைன் வெப்சைட்யில் எப்படி விதவிதமாக டிசைன்ஸ் செய்வது என்பதை கற்றுக்கொண்டால் போதும் அதை கொண்டு பிரீலான்சர் ப்ராஜெக்ட் செய்யலாம், டிசைன்ஸ் விற்பனை செய்யும் நிறைய வெப்சைட் இருக்கிறது அதில் உங்கள் டெம்ப்ளட்ஸ் பதிவிட்டு விற்பனை ஆகும் தொகையில் கமிஷன் பெறலாம், சோசியல் மீடியா influencer-க்கு டெம்ப்லேட்ஸ் செய்து கொடுக்கலாம்.

அடுத்து 3d assets உருவாக்கி விற்கலாம். இதற்கு வரும்காலத்தில் நல்ல டிமாண்ட் உருவாகும் அதற்கு இப்போதே இதை கற்றுக்கொள்வது நல்லது. 3d மாடலிங் மூலம் கேரக்டர்ஸ், பொருட்கள், சுற்றுப்புறம், கட்டிடங்கள் இப்படி அனைத்தையும் டிசைன் செய்து இதை விற்பதற்காகவே நிறைய வெப்சைட்ஸ் இருக்கிறது அதில் உங்கள் டிசைன்ஸ் அப்லோட் செய்து சம்பாதிக்கலாம்.

அடுத்து Templates இது என்னவென்றால் ஒருவருக்கு தேவைப்படும் டிசைன் மொத்தமாக தயார் செய்து இருப்பது தான் templates. இதில் social media templates, website templates, excel templates, resume templates, email templates, letter templates இப்படி பல வகைகள் இருக்கிறது. இவை அனைத்தும் எளிதாக கற்றுக்கொள்ளலாம் குறுகிய நேரத்தில் செய்து விடலாம் அதனால் இதை நீங்கள் கண்டிப்பாக முயற்சி செய்து பார்க்கலாம். Etsy, Upwork இது போன்ற வெப்சைட் மூலம் உங்கள் templates விற்கலாம்.

Conclusion

மேலே குறிப்பிடப்பட்ட எந்த வேலையும் உங்களுக்கு உடனடி வருமானம் கொடுக்காது. முதலில் ஒரு வேலையே தேர்ந்தெடுத்து நன்றாக கற்றுக்கொண்டு பயிற்சி செய்து கொள்ளுங்கள். பிறகு உங்கள் வேலையே பற்றி சமூக வலைத்தளத்தில் கணக்கு தொடங்கி அதில் பதிவிடுங்கள் அதன் மூலம் உங்களுக்கு வாடிக்கையாளர்கள் கிடைக்கலாம். இதில் அவசரம் இல்லாமல் படிப்படியாக முன்னேறுங்கள். தற்போது இதற்கெல்லாம் நல்ல டிமாண்ட் இருந்து வருகிறது அதை பயன்படுத்தி வெற்றி பெறுங்கள்.

Leave a comment