Site icon moneytwice.in

About Us

என் பெயர் விக்னேஷ். நான் என்னுடைய அனுபவத்தில் கற்றுக்கொண்ட பல்வேறு விஷயங்களை உங்களுடன் இங்கே பகிர்ந்து கொள்கிறேன் . ஒவ்வொருவருக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட வருமானம் வரவேண்டியது அவசியமாகிறது. ஆனால் அதை பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாததால் பெரும்பாலோனோர் ஒற்றை வருமானத்தை மட்டுமே நம்பி உள்ளனர். ஆங்கிலத்தில் இதை பற்றிய இணையதளங்கள் நிறைய உள்ளன ஆனால் தமிழ் மொழியில் குறைவாகவே உள்ளது. அதனால் என்னால் முடிந்த அத்தனை தகவல்களையும் இங்கே பதிவிட உள்ளேன்.

ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிப்பது, Passive income வாய்ப்புகள் பற்றிய தகவல்கள், வேலை பார்த்து கொண்டே தொழில் மூலம் பணம் சம்பாதிப்பது போன்ற பதிவுகளை நீங்கள் இங்கே காணலாம். நான் நன்கு ஆராய்ந்து தெளிவான தகவல்களை உங்களுக்கு கொடுப்பேன். இதன் மூலம் அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் நான் கட்டுரைகளை கொடுப்பேன். என் கட்டுரைகள் மூலம் ஒற்றை வருமானத்தில் இருப்பவர் இரண்டாம் வருமானம் உருவாக்கவும், மாணவர்கள், வேலை தேடுபவர்கள் அல்லது இல்லத்தரசிகள் இவர்களுக்கு Side Income கிடைக்க வேண்டும் என்பதே என் நோக்கம். என் கட்டுரையில் உங்களுக்கு வரும் சந்தேகங்களுக்கு இமெயில் மூலமாக என்னை தொடர்பு கொள்ளலாம்.

Exit mobile version