இன்டர்நெட் மற்றும் கணினி பயன்படுத்தி பணம் சம்பாதிக்க பல்வேறு வெப்சைட்ஸ் உள்ளது. அதில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சில வெப்சைட்ஸ் பற்றிய தொகுப்பை பார்க்கலாம்.
Secret Websites to Make Money Online
இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிப்பது என்பது எளிதான ஒன்று ஆனால் அதை சரியாக பயன்படுத்துபவர்கள் மட்டுமே சம்பாதிக்கிறார்கள். நமக்கு பொதுவாக தெரிந்த வெப்சைட்ஸ் Fiverr, Upwork இதன் மூலம் பிரீலான்சராக சம்பாதிக்கலாம், மேலும் சில வெப்சைட்ஸ் மூலம் சம்பாதிக்கலாம் என நிறைய யூடியூப் சேனல்களில் பார்த்திருப்போம். ஆனால் அதிகமாக பேசப்படாத Secret Websites to Make Money Online பற்றி பார்க்கலாம்.
Shutterstock, Getty Images, Adobe Stock
உங்களுக்கு போட்டோகிராபியில் ஆர்வம் உள்ளதா அப்படி இருந்தால் நீங்களும் இந்த வெப்சைட்ஸ் மூலம் உங்கள் மொபைல் போன் வைத்தே சம்பாதிக்கலாம். நாம் பார்க்கும் டிவி சேனல்ஸ், யூடியூப் வீடியோஸ், வெப்சைட்ஸ் இதில் அவர்களுக்கு தேவைப்படும் இடத்தில Images மற்றும் Videos பயன்படுத்துவார்கள் அவை எல்லாமே இந்த வெப்சைட்ஸ்ல் இருந்து வாங்கியதே. இந்த வெப்சைட்ஸ்ல் யார் வேண்டுமானாலும் Creator ஆக இணைந்து Images மற்றும் Videos அப்லோட் செய்து சம்பாதிக்கலாம்.
அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்று தான் Creative ஆக Images மற்றும் Videos எடுக்க வேண்டும். அதற்கான வழிமுறைகள் எல்லாமே அந்த வெப்சைட்ஸ் மற்றும் யூடியூப் வீடியோஸ் மூலமாக நீங்கள் கற்றுக்கொள்ளலாம். இதை நீங்கள் சரியாக செய்தால் போதும் இதிலிருந்து உங்களுக்கு Passive Income வரும்.
Amazon KDP, Amazon Seller Central
Amazon ஐ நாம் பொதுவாக ஆன்லைன் ஷாப்பிங் செய்யவும், Amazon Prime-இல் படம் பார்க்கவும் பயன்படுத்துவோம். ஆனால் Amazon ஐ வைத்து பணம் சம்பாதிக்க இப்படி ஒரு வழி இருப்பது இன்னும் நம்மில் நிறையபேருக்கு தெரியவில்லை. முதலில் Amazon KDP பற்றி பார்க்கலாம், KDP என்றால் Kindle Direct Publishing அதாவது நேரடியாக யார் வேண்டுமானாலும் இதில் ரெஜிஸ்டர் செய்து சொந்தமா புத்தகம் எழுதி எந்த கட்டணமும் இல்லாமல் விற்கலாம். புத்தகம் என்றால் அனைத்து வகையான புத்தகமும் எழுதலாம் கதை, கவிதை, சுயசரிதை இது போன்றதும் மற்றும் Activity Books எனப்படும் Colouring Books, Journal Notes, School Notebooks இவை அனைத்தும் நீங்கள் உருவாக்கி விற்கலாம். அதற்கு தேவையான அனைத்து Tools Amazon KDP யில் உள்ளது.
அடுத்து Amazon Seller Central இது தற்போது தென் மாநில மக்களிடையே நல்ல விழிப்புணர்வு பெற்று மக்கள் இதில் இணைந்து சம்பாதிக்கிறார்கள். Amazon Seller Central என்பது amazon யில் பொருட்கள் விற்கும் Sellers மற்றும் Buyers ஐ இணைக்கும் ஒரு இடம். உங்களிடம் GST Certificate இருந்தால் நீங்களும் Seller ஆக சேர்ந்து அமேசானில் பொருள் விற்கலாம். இதற்கு நீங்கள் Manufacturer ஆக இருக்க வேண்டும் என்று இல்லை, அவரிடம் பொருள் வாங்கி Reseller ஆக இதில் விற்பனை செய்யலாம். நீங்கள் விற்கும் பொருளுக்கு ஏற்ப சில ஆவணங்கள் தேவைப்படலாம். வட மாநிலங்களில் இதை சரியாக பயன்படுத்தி லட்சங்களில் சம்பாதிக்கிறார்கள்.
Medium.com, Blogger
உங்களுக்கு கட்டுரை எழுதுவதில் ஆர்வம் இருக்கிறதா அப்படி என்றால் Medium மற்றும் Blogger மூலம் கட்டுரை எழுதி சம்பாதிக்கலாம். கட்டுரை என்றால் சினிமா, அரசியல், வரலாறு, கதைகள், கவிதை, டெக்னாலஜி இப்படி உங்களுக்கு ஆர்வம் உள்ள எந்த வகை கட்டுரை வேண்டுமானாலும் எழுதலாம். Blogger மூலம் இலவசமாக Blog எழுதலாம், இதில் நீங்கள் பணம் சம்பாதிக்க தொடர் முயற்சி மற்றும் பொறுமை மிகவும் அவசியம். உங்கள் கட்டுரை கூகிள்ளில் பார்வையாளர்களை பெறுவதற்கு சில மாதங்கள் ஆகும் அதுவரை உங்கள் கட்டுரைகளை பதிவிட வேண்டும். உங்கள் Blog யில் கூகிள் ads மற்றும் ஸ்பான்ஸர் போஸ்ட் மூலம் சம்பாதிக்கலாம்.

Medium என்பதும் Blogger போலவே தான் ஆனால் இதில் நமக்கு Earnings வருவதற்கு சில விதிகள் உள்ளது அதை சரியாய் செய்தால் அவர்களே நமக்கு Earnings ஆப்ஷன் கொடுப்பார்கள் அதன் பிறகு நம் கட்டுரையை ஒவ்வொரு முறை பார்வையாளர்கள் படிக்கும் போது நமக்கு அதன் மூலம் வருமானம் வரும். நீங்கள் உங்களின் சொந்த கட்டுரையை பார்வையாளர்கள் படிக்கும் விதமாக எழுதினால் போதும் இதில் நீங்கள் வெற்றி பெறலாம்.
ETSY
ETSY இந்த ஒரு வெப்சைட் போதும் நீங்கள் பல வழிகளில் பணம் சம்பாதிக்கலாம். உங்களுக்கு டீ ஷர்ட்ஸ் டிசைன்ஸ், கலை பொருட்கள், டிஜிட்டல் ப்ராடக்ட்ஸ், வீட்டு அலங்கார பொருட்கள், துணிகள் இப்படி பல பொருட்கள் விற்கலாம். இதில் இருக்கும் முக்கிய அம்சமே நீங்கள் இந்தியா மட்டும் இல்லாமல் வெளிநாட்டில் இருக்கும் வாடிக்கையாளர்களிடம் கூட விற்கலாம். இதில் குறிப்பாக டிஜிட்டல் ப்ராடக்ட்ஸ் Category யில் நிறைய வாய்ப்பு உள்ளது. Journal Notes, Excel மற்றும் கூகிள் Sheets டெம்ப்ளட்ஸ், Resume டெம்ப்ளட்ஸ், Planners, Kids Activity புத்தகம், Invoice டெம்ப்ளட்ஸ் இப்படி இன்னும் நிறைய Options இதில் உள்ளது. நீங்கள் Chatgpt போன்ற AI மூலமாக உங்கள் திறமையும் சேர்த்து டிசைன் செய்து இதில் எளிதாக விற்பனை செய்யலாம்.
Envato, ThemeForest
உங்களுக்கு டிசைனிங் மற்றும் கோடிங் செய்வதில் ஆர்வம் உள்ளதா இந்த வெப்சைட்ஸ் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்கலாம். ETSY வெப்சைட்ல் உள்ளது போல இதிலும் நீங்கள் டெம்ப்ளட்ஸ், Graphics டெம்ப்ளட்ஸ், 3D டெம்ப்ளட்ஸ், வெப்சைட் தீம்ஸ், வெப்சைட் Plugins, Fonts, சவுண்ட் எபக்ட்ஸ், இப்படி நிறைய இருக்கிறது. பொறுமையாக இதில் உள்ள வாய்ப்பை ஆராய்ந்து டிமாண்ட் உள்ளதை கண்டறிந்து அதற்கு ஏற்றார் போல டிசைன் செய்தால் போதும் ஒவ்வொரு முறை வாடிக்கையாளர் வாங்கும்போதும் உங்களுக்கும் இதில் கமிசன் கிடைக்கும்.
Conclusion
இதில் குறிப்பிட்டுள்ளது மிகவும் குறைவே இது போன்ற இன்னும் நிறைய வெப்சைட்ஸ் உள்ளது. அதில் முக்கியமான வெப்சைட்ஸ் மட்டுமே இங்கே கொடுக்கப்பட்டுள்ளது, மீதமுள்ள வெப்சைட்ஸ் அடுத்ததாக வரும் கட்டுரைகளில் பார்க்கலாம். முக்கியமான ஒன்று இதில் நீங்கள் உடனடியாக பணம் சம்பாதிப்பது கடினம் உழைப்பும் பொறுமையும் இருந்தால் மட்டுமே தொடர்ந்து இதில் சம்பாதிக்கலாம். இப்போது இருக்கும் AI டெக்னாலஜி மூலம் எதையும் எளிதாக கற்றுக்கொள்ளலாம் உங்களுக்கு எதிலே ஆர்வம் உள்ளதோ அதை AI மூலம் கற்றுக்கொண்டு முயற்சி செய்யுங்கள்.