Passive Income பற்றிய முழு தகவல்களுடன் அதை செயல்படுத்தும் 10 passive income ideas in india பற்றிய வழிமுறைகள் பார்க்கலாம்.
Passive Income என்றால் என்ன?
Passive Income என்பது நீங்கள் நேரடியாக தொடர்ந்து வேலை செய்யாமல் பணம் சம்பாதிப்பது. ஒருமுறை நீங்கள் செய்யும் வேலை உங்களுக்கு தூங்கும் போதும் பணம் சம்பாதித்து கொடுப்பதே Passive Income என்பது.
Passive Income ஏன் நீங்கள் Financial Freedom அடைய அவசியம் ஆகிறது?
ஒருவர் வேலையின் மூலம் பெரும் வருமானத்தை மட்டுமே நம்பி இருப்பது ஆபத்தானது. Passive Income நீங்கள் அதற்காக தொடர்ந்து வேலை செய்யாமலும் வருமானம் கொடுக்கும் மற்றும் ஒற்றை வருமானத்தை நம்பி இருக்கும் Risk-ஐ குறைக்கிறது. Passive Income உருவாக்க உங்களுக்கு குறைந்த நேரமே தேவைப்படும், அது உங்களுக்கு வருமானம் கொடுக்க தொடங்கியதுமே உங்களுக்காக உங்கள் நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். உதாரணமாக ஏதேனும் Skill develop செய்யலாம், உங்கள் குடும்பத்துடன் நேரம் செலவிடலாம், புதிய தொழில் தொடங்கலாம்.

இதன் மூலம் உங்களுக்கு Financial stress சற்று குறையும். சிலசமயங்களில் உங்களுக்கு வேலை பறிபோகும் அபாயம் உள்ளது. அந்நிலையில் Passive Income மூலமாக வரும் வருமானம் உங்களின் செலவுகளை செய்து கொள்ள உதவியாக இருக்கும். மேலும் இந்த passive income மூலமாக நீங்கள் முதலீடுகள் செய்து உங்கள் Wealth-ஐ அதிகரிக்க முடியும். உதாரணமாக பங்கு சந்தை முதலீடு, Bank FD முதலீடு. ரியல் எஸ்டேட் முதலீடு மற்றும் பிசினஸ் முதலீடும் செய்யலாம்.
இன்றைய மாடர்ன் உலகில் passive income சம்பாதிக்க எண்ணற்ற வழிகள் உள்ளது. ஆன்லைன் மூலமாக உங்கள் வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம் ஆனாலும் பெரும்பாலானோர் இதில் தோல்வி அடைய முக்கிய காரணம் பொறுமை இல்லாததே. வேலை செய்ய தொடங்கியதுமே வருமானம் எதிர்பார்க்காமல் அதற்கு தேவையான நேரத்தை நாம் கொடுக்க வேண்டும். இதை சரியாக உபயோகிக்கும் பலர் இன்று ஆயிரங்களில் தொடங்கி லட்சங்களில் சம்பாதிக்கிறார்கள். அவர்களால் முடியும் போது நம்மாலும் முடியும் தொடர் முயற்சி மற்றும் பொறுமை உங்களுக்கு வெற்றியை கொடுக்கும்.
🔹 Passive Income தொடங்கும் முன் தெரிந்திருக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்
Passive income (செயலற்ற வருமானம்) என்பது அனைவரும் விரும்பும் வருமான முறைதான். ஆனால் இதை தொடங்குவதற்கு முன் சில முக்கியமான விஷயங்களை தெரிந்துகொள்வது அவசியம்:
✅ 1. ஆரம்பத்தில் உழைப்பு தேவைப்படும்
Passive income என்றாலே எதுவும் செய்யாமல் பணம் வர வேண்டும் என நினைக்கிறோம். ஆனால் உண்மையில், ஆரம்ப கட்டத்தில் உழைப்பு, நேரம் மற்றும் திட்டமிடல் தேவைப்படும். ஒரு YouTube சேனல் தொடங்க, blog எழுத, அல்லது digital product உருவாக்க — எல்லாம் முதலில் உழைப்பே தேவைப்படும்.
✅ 2. நம்பிக்கை மற்றும் பொறுமை முக்கியம்
Passive income இன்று தொடங்கிவிட்டு நாளை பணம் வரும் என எதிர்பார்ப்பது தவறு. SEO, audience building, trust creation ஆகியவை எல்லாம் நேரம் எடுத்துக்கொள்ளும். எனவே நம்பிக்கையுடன் தொடர்வது முக்கியம்.
✅ 3. பல வழிகளை சோதிக்கலாம்
Affiliate marketing, blogging, online course sales, dividend stocks, real estate rent — இவை அனைத்தும் passive income தரும் வழிகள். உங்கள் ஆர்வம், திறன் மற்றும் முதலீட்டுத் தயாரிப்பின் அடிப்படையில் ஒரு (அல்லது பல) வழிகளை தேர்வு செய்யலாம்.
✅ 4. நிதி மற்றும் கால மேலாண்மை
Passive income உருவாக்க பலதரப்பட்ட நிதி திட்டமிடலும், நேர மேலாண்மையும் முக்கியம். உங்கள் முழு நேர வேலையுடன் கூட இது செய்ய முடியும் — ஆனால் திட்டமிட்டு செய்யவேண்டும்.
10 passive income Ideas in india
- Affiliate Marketing
Affiliate Marketing என்பது ஒரு நிறுவனத்தின் பொருள் அல்லது சேவையை நீங்கள் ஆன்லைனில் ப்ரொமோட் செய்து அதன் மூலம் அந்த நிறுவனத்திற்கு கிடைக்கும் வருமானத்தில் உங்களுக்கு ஒரு தொகை கிடைக்கும் அதுவே ஆகும். உதாரணமாக Amazon மற்றும் Flipkart போன்ற நிறுவனத்தின் Affiliate சேவையை நீங்களும் promote செய்யலாம்.
- Selling Online Course
தற்போது Online Course மிகவும் டிரெண்டிங்கில் உள்ளது. பல Influencers இதை சரியாக உபயோகித்து நிறைய பணம் சம்பாதிக்கிறார்கள். உங்களுக்கு எந்த துறையில் நல்ல அனுபவம் மற்றும் அறிவு உள்ளதோ அதை ஆன்லைன் மூலம் மற்றவர்களுக்கும் கற்பித்து வருமானம் பெறலாம். இப்போது இதற்காகவே நிறைய Tools உள்ளது அதன் மூலம் Online Course நீங்கள் உருவாக்கலாம்.
- Rental Income
உங்களிடம் காலி இடம் இருந்தால் அதை வாடகைக்கு விடலாம் அல்லது அதில் கடை கட்டி வாடகைக்கு விடலாம். தற்போது காலி இடம் மட்டும் இருந்தால் போதும் பல்வேறு தொழில் அதில் செய்து சம்பாதிக்க முடியும் உதாரணமாக Turf Business , வாகனம் பார்க்கிங், விளம்பர பலகை வைத்து வாடகை பெறலாம். இப்படி இன்னும் நிறைய வாய்ப்புகள் உள்ளது உங்களுக்கு தொழில் செய்ய விருப்பம் இல்லை என்றல் தொழில் செய்பவர்களிடம் வாடகைக்கு விட்டு வருமானம் பெறலாம்.

- Youtube Channel
தற்போது Youtube Channel மூலம் வருமானம் பெறுவது நம் நாட்டில் மிகவும் பிரபலமாக உள்ளது. உங்களுக்கு பிடித்த விஷயத்தை பற்றி வீடியோ பதிவிட்டால் போதும் அது கல்வி, விளையாட்டு, சமையல், ஆரோக்கியம், பிட்னெஸ் இப்படி எதுவாகவும் இருக்கலாம். உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது வீடியோ ரெக்கார்ட் செய்து அதை எடிட் செய்து பதிவிட வேண்டும் அவ்வளவு தான். ஆனால் இதில் வருமானம் வருவதற்கு சற்று நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும்.
- Social Media Influencer
Instagram, Facebook போன்றவை தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பிரபலமாக உள்ளது. நீங்களும் இதில் account ஓபன் செய்து Reels மற்றும் Post பதிவிட்டு கணிசமான Followers பெற்றதும் வருமானம் பெறலாம். தற்போது Facebook நிறுவனம் Monetize பெற்ற Influencers-க்கு போனஸ் மற்றும் ஒவ்வொரு வீடியோ பதிவிற்கும் பணம் கொடுக்கிறது. மேலும் நிறுவனங்களை நீங்கள் ப்ரோமோஷன் செய்தும் சம்பாதிக்கலாம்.
- Sell Digital Products
Digital Products-க்கு உதாரணமாக ஆன்லைன் கோர்ஸ், E-book, Templates, Designs, Digital Art இப்படி இன்னும் நிறைய இருக்கிறது. இதற்கு தேவையான Skill வளர்த்துக்கொண்டு நீங்களும் ஒருமுறை Digital Product உருவாக்கி அதன் மூலம் தொடர்ந்து வருமானம் பெறலாம்.
- Stock Market Investment
Stock market investment பலரை கோடீஸ்வரர்களாகவும் மேலும் பலரை ஏழையாகவும் மாற்றி உள்ளது. அதில் இருக்கும் வாய்ப்பை பயன்படுத்தி தேவையான அறிவை வளர்த்து கொண்டு பொறுமையாக சிறு முதலீடு செய்து வந்தால் அது வளர்ந்து உங்களுக்கு வருமானம் கொடுக்கும். நேரடி முதலீடு செய்ய விருப்பம் இல்லாதவர்கள் Mutual Fund இல் SIP மூலம் மாதாந்திர முதலீடு செய்யலாம்.
- App and game development
Software துறையில் வேலை செய்பவர்கள் அல்லது அதை படிப்பவர்கள் உங்கள் நேரத்தை செலவிட்டு ஒரு App அல்லது Game உருவாக்கி கூகிள் பிலே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோர் போன்றவற்றில் Upload செய்து சம்பாதிக்கலாம். தற்போது இதை நீங்கள் இலவசமாக உங்கள் அறிவை மட்டுமே வைத்து உருவாக்க முடியும். இதற்கு நீங்கள் கடுமையான உழைப்பை கொடுக்க நேரிடும் ஆனால் அதற்கான பலனும் இதில் கிடைக்கும்.
- Blogging
நாளுக்கு நாள் அதிகரிக்கும் Internet தேவைகளுக்கு ஏற்ப மக்கள் ஆன்லைனில் அதிகமா தேடுகிறார்கள், படிக்கிறார்கள். இதனால் ஆங்கிலம் மட்டும் இல்லாமல் பல மொழிகளில் Content தேவை அதிகமாக உள்ளது. உங்களுக்கு விருப்பமான விஷயத்தை பற்றி இலவசமாக பிளாக்கர் தளத்தில் நீங்களும் Blog பதிவிடலாம். இதில் Ads மற்றும் Subscription மூலம் வருமானம் பெறலாம்.
- Sell Stock Photos and Videos
நாம் பார்க்கும் youtube வீடியோ மற்றும் இணையதளங்களில் அதற்கு தேவையான Photo மற்றும் Video வருவதை பார்த்திருப்போம் அவை அனைத்தும் நம்மை போன்ற யாரோ ஒருவர் எடுத்து பதிவிட்டதாகத்தான் இருக்கும். ஒவ்வொரு முறையும் இதை ஒருவர் வாங்கும் போதும் இவருக்கு கமிஷன் தொகை கிடைக்கும். இதற்கென தற்போது நிறைய இணையதளங்கள் இருக்கிறது. நீங்களும் அதில் சேர்ந்து உங்கள் படைப்புகளை பதிவிட்டு வருமானம் பெறலாம்.
இதை எப்படி தொடங்குவது?
இங்கே கொடுத்திருப்பது முதல் 10 passive income Ideas in india மட்டுமே இது மட்டும் இல்லாமல் இன்னும் நிறைய வாய்ப்புகள் உள்ளது. அதில் உங்களுக்கு விருப்பமானதை தேர்ந்தெடுத்து அதில் உங்கள் Skill develop செய்து கொண்டு முயற்சி செய்யுங்கள். தற்போது ஆன்லைன் வழியாக வாய்ப்புகள் கொட்டி கிடைக்கின்றன அதை சரியாக பயன்படுத்தி சம்பாதிக்கலாம்.
இந்த கட்டுரையை பற்றிய உங்கள் கருத்துக்கள் மற்றும் சந்தேகங்கள் இருந்தால் Comment செய்யலாம். இனி வரப்போகும் கட்டுரையில் பணம் சம்பாதிக்கும் பல்வேறு வாய்ப்புகளை பற்றி பார்க்கலாம்.
4 thoughts on “நீங்களும் பெறலாம் Passive income. தூங்கும் போதும் பணம் சம்பாதிக்கும் 10 passive income Ideas in india.”