“2025ல் சிறிய முதலீட்டில் தொடங்கக்கூடிய 5 தொழில்கள் | 5 Small Investment Business ideas to start in 2025”

இந்தியாவில் தற்போது இருக்கும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சி, இந்திய அரசின் புதிய தொழில் ஊக்குவிப்பு திட்டங்கள் மற்றும் மக்கள் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகியவை நம்மிடம் புதிய வணிக வாய்ப்புகளை பெருக்குகின்றன.
பெரிய முதலீடு இல்லாமல், சந்தையில் இருக்கும் இடைவெளியை அடையாளம் காண்பதன் மூலம் வெற்றிகரமான தொழில் தொடங்க முடியும்.

இந்த கட்டுரையில், “5 Small Investment Business ideas to start in 2025” பற்றி பார்க்கப்போகிறோம்.


1. சிப் உற்பத்தி தொடர்பான டிசைன் சேவை (Chip Design Services)

இந்தியா தற்போது semiconductor மற்றும் chip manufacturing துறையில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. தற்போது சில வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் சிப் தயாரிக்க உற்பத்தி ஆலையை தொடங்கி உள்ளனர். இனி வரும் காலத்தில் இந்த சிப்-ன் தேவை அதிக அளவில் இருக்கும். இந்த துறையில் சிப் டிசைன் மிக முக்கிய பங்காற்றுகிறது. இந்த சிப் டிசைன் சந்தை மதிப்பு 2030 இல் ஏறக்குறைய 1 டிரில்லியன் வரை செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இப்போது உங்களுக்கு புரியும் இதில் எவ்வளவு வாய்ப்புகள் இருக்கும் என்று. தைவான், அமெரிக்கா, சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் சிப் துறையில் நல்ல வளர்ச்சியை கொண்டுள்ளது ஆனால் இந்தியா தற்போது தான் இந்த துறையின் தொடக்கத்தில் உள்ளது. இதனால் இந்த துறையில் அதிக வேலை மற்றும் தொழில் வாய்ப்புகள் உருவாகும் அதை சரியாக பயன்படுத்திகொள்ள வேண்டும்.

எந்த மாதிரியான தொழில் வாய்ப்புகள் உள்ளது?

  • Chip designing, verification, equipment maintenance, training and education, IoT product development, EDA software and tools development and layout preparation போன்ற பல தொழில் வாய்ப்புகள் இதில் உள்ளது.
  • தற்போது இந்த மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இப்போதே இந்த வாய்ப்பை பயன்படுத்தி தொழில் தொடங்குவது நல்லது.

எப்படி தொடங்குவது?

  • இதை பற்றிய முழுமையான பயிற்சி எடுத்துக்கொண்டு இந்த துறையில் தொழில் தொடங்கலாம் அல்லது இதில் நல்ல அனுபவம் உள்ளவரை சேர்த்து startup நிறுவனம் தொடங்கலாம்.
  • இந்த துறையில் அனுபவம் உள்ளவர்கள் சிறிய தொழில்நுட்ப பயிற்சி அல்லது கடைசி ஆண்டு electronics graduates-க்கு semiconductor பற்றிய கோர்ஸ் எடுக்கலாம்.
  • Startups மற்றும் பெரிய நிறுவனங்களுக்கு support மற்றும் services வழங்கலாம்.

2.(GEM Portal Supplier)

இந்திய அரசின் GEM Portal (Government eMarketplace) மூலம் அரசு துறைகளுக்கு தேவையான பொருட்கள் விற்பனை செய்யும் தொழில் வாய்ப்பு உள்ளது. இதில் பொதுவாக பெரிய நிறுவனங்கள் மட்டுமல்லாமல் சிறு வணிகர்களுக்கும் சேர்ந்து விற்பனை செய்யலாம். இது என்னவென்றால் அனைத்து விதமான மத்திய மற்றும் மாநில அரசு நிறுவனங்கள் அவர்களுக்கு தேவையான பொருட்கள் மற்றும் சேவைகளை பெறுவதற்காக உருவாக்கப்பட்டது இந்த GEM Portal.

எந்த மாதிரியான தொழில் வாய்ப்புகள் உள்ளது?

  • நீங்கள் ஒரு manufacturer அல்லது reseller ஆக இருந்தால் இதில் இணைந்து விற்பனை செய்யலாம் அல்லது நீங்கள் ஏதேனும் சர்வீஸ் உதாரணமாக எலக்ட்ரிகல், கணினி சர்வீஸ், கட்டிட வேலை இப்படி பல வித சர்வீஸ் இந்த GEM Portal வழியாக செய்யலாம்.

எப்படி தொடங்குவது?

  • GEM Portal-ல் நீங்கள் seller கணக்கு தொடங்க வேண்டும் இதற்கு ஆதார் கார்டு, பான் கார்டு, gst certificate, msme certificate தேவைப்படும்.
  • கணக்கு தொடங்கியதும் அதில் உங்கள் dashboard சென்று பார்த்தால் பொருட்கள் தேவை பற்றி ஆர்டர் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் நீங்கள் உங்கள் பொருளின் விலை மற்ற விவரங்களை கொடுத்து Bid செய்யவேண்டும். உங்களை போல பலபேர் இதில் பங்கேற்பார்கள் உங்களுக்கு ஆர்டர் கிடைக்கும் பட்சத்தில் நீங்கள் பொருட்களை பேக் செய்து அவர்கள் குறிப்பிட்டுள்ளபடி அனுப்பிவிடலாம்.
5 Small Investment Business ideas to start in 2025

3. Tier 2 மற்றும் Tier 3 நகரங்களில் Franchise தொழில் தொடங்குவது

பெரும்பாலான பெரிய பிராண்டுகள் இன்று Tier 1 நகரங்களில் மட்டுமே பரவலாக இருக்கின்றன. ஆனால் Tier 2, 3 நகரங்களில் பெரிய பிராண்டுகள் குறைவாகவே உள்ளன. இந்த Tier 2, 3 நகரங்கள் இப்போது தான் வளர்ச்சி பெற்று வருகிறது இந்த சமயத்தில் நீங்கள் அந்த பகுதியில் இல்லாத மற்றும் மக்களுக்கு தேவைப்படும் தொழிலை தேர்ந்தெடுத்து அது சம்பந்தப்பட்ட Franchise தொடங்கலாம்.

எந்த மாதிரியான தொழில் வாய்ப்புகள் உள்ளது?

  • Tier 2/3 நகரங்களில் எந்த மாதிரியான பிராண்ட் கடைகள் இல்லை என்பதை ஆராய வேண்டும். பின்பு கிடைத்த தகவல்படி எந்த கடைகள் இல்லையோ அதில் எதற்கு எந்த பகுதியில் டிமாண்ட் இருக்கும் என்பதை பார்த்து பின்பு தொழில் தொடங்குவதை பற்றிய முடிவெடுக்கலாம்.
  • பிராண்ட் பார்மசி, மொபைல் கடைகள், authorised service centres, authorised parts dealership, டிஜிட்டல் மார்க்கெட்டிங் சர்வீஸ், ஆர்கானிக் ஸ்டோர், பிட்னெஸ் ஸ்டூடியோ, பல வகையான கோச்சிங் சென்டெர்ஸ் இப்படி மிக பெரிய வாய்ப்பு இந்த நகரங்களில் இருக்கிறது.

எப்படி தொடங்குவது?

  • முதலில் உங்கள் பகுதியில் எந்த தொழில் செய்வது என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும் பின்பு அந்த தொழிலில் இருக்கும் franchise வாய்ப்புகள் பற்றி தெரிந்து கொண்டு சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் தொடர்பு கொண்டு பேசி தகவல்களை பெற்று கொண்டு உங்கள் முதலீட்டிற்கு ஏற்ற நிறுவனத்தின் franchise பார்ட்னர் ஆக சேர்ந்து கொள்ளுங்கள்.

4. பாரம்பரிய உபயோகப் பொருட்களை கண்டுபிடித்து ecommerceல் விற்பனை செய்தல்

இன்று மக்கள் பாரம்பரியப் பொருட்களை (traditional items) மக்கள் தேடி தேடி வாங்குகிறார்கள். உலகம் எவ்வளவு நவீனமயம் ஆனாலும் இந்த பொருட்களுக்கான மதிப்பு குறையவே இல்லை. இகாமெர்ஸ் வணிகம் தற்போது பிரபலமாக இருக்கும் நிலையில் நீங்கள் இந்த பொருட்களை ஆன்லைன் வழியாக விற்பனை செய்யலாம்.

எந்த மாதிரியான தொழில் வாய்ப்புகள் உள்ளது?

  • பாரம்பரியப் பொருட்கள் என்றால் விளக்குகள், சமையல் பாத்திரங்கள், வீட்டு அழகுசாதன பொருட்கள் இன்னும் நிறைய இருக்கின்றன. ஆனால் இந்த பொருட்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு பகுதிகளில் செய்யப்படுகிறது அதை நீங்கள் கண்டுபிடித்து வாங்கி விற்க வேண்டும். நான் சமீபத்தில் பார்த்த நேர்காணலில் ஒரு பெண் வெளிநாட்டு வேலையே விட்டுவிட்டு இந்த பொருட்களுக்கு இருக்கும் தேவையை புரிந்து கொண்டு ஆன்லைன் வழியாக விற்பனை செய்து லட்சத்தில் மாதம் சம்பாதிக்கிறார்.
  • இதில் பலவகையான தொழில் வாய்ப்புகள் உள்ளது குறிப்பாக இந்த பாரம்பரியப் பொருட்களை செய்பவர்கள் பெரும்பாலானவர்கள் கிராமப்புற பகுதியில் இருக்கிறார்கள். அதனால் அவர்களால் இந்த பொருட்களை உலகம் முழுவதும் இருக்கும் வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஒரு இடைவெளி இருக்கிறது. இந்த இடைவெளியை நீங்கள் நீக்கினால் இந்த தொழிலில் வெற்றி பெறலாம்.
  • E-commerce வெப்சைட் மூலம் விற்கலாம் அல்லது இன்ஸ்டாகிராம், யூடியூப் வழியே இந்த பொருட்களை பற்றிய வீடியோ பதிவிட்டு விற்கலாம் மற்றும் உங்களுக்கென கடை வைத்து விற்கலாம்.

எப்படி தொடங்குவது?

  • முதலில் நீங்கள் பாரம்பரியப் பொருட்களை உற்பத்தி செய்பவரை அணுகி அந்த பொருட்களின் தன்மை, உபயோகம் மற்றும் விலை பற்றிய முழு தகவல்களையும் பெற்று கொள்ளுங்கள்.
  • முதலில் இன்ஸ்டாகிராம், யூடியூப் வழியே மக்களுக்கு உங்கள் பொருட்களை பற்றிய விழிப்புணர்வு கொடுக்க வேண்டும். அதில் கிடைக்கும் வரவேற்பு மற்றும் விற்பனையை பொறுத்து நீங்கள் சொந்தமாக கடையும், E-commerce வெப்சைட்யும் தொடங்கி விற்பனையை அதிகரிக்கலாம்.

5. எலக்ட்ரிக் வாகன சர்வீஸ் சென்டர்

Electric Vehicle (EV) துறை தற்போது மிக வேகமாக வளர்ந்து வருகிறது. மக்கள் தற்போது எலக்ட்ரிக் வண்டிகளுக்கு மெதுவாக மாற தொடங்கி இருக்கிறார்கள். இதன் காரணமாக அதற்கான சர்வீஸ் செய்யும் தொழிலுக்கும் தேவை அதிகரித்து உள்ளது. சிறிய பழுது மற்றும் அவசர தேவை இருக்கும் போது பொதுவாக அருகில் இருக்கும் சர்வீஸ் சென்டர்க்கு செல்வதே எளிதாக இருக்கும் அப்படி பார்க்கும் போது எலக்ட்ரிக் வண்டிக்கு சர்வீஸ் சென்டர் மிக மிக குறைவே இதை பயன்படுத்தி தொழில் தொடங்கலாம்.

எந்த மாதிரியான தொழில் வாய்ப்புகள் உள்ளது?

  • Electric Vehicle service
  • EV charging station
  • EV spare parts

எப்படி தொடங்குவது?

  • இதற்கென குறைந்த செலவில் நிறைய course-கள் நடத்தப்படுகின்றன அதில் சேர்ந்து பயிற்சி பெற்று தொடங்கலாம்.
  • EV charging station வைப்பதற்கு சில நிறுவனங்கள் franchise முறையில் குறைந்த முதலீட்டில் கொடுக்கிறார்கள் அதன் மூலம் தொழில் தொடங்கலாம்.

முடிவு

தொழில் செய்யவேண்டும் என்ற ஆசையில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் ஏராளமாக இருக்கிறது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த தெரிந்தவர்கள் தொழிலில் வெற்றி பெறுகிறார்கள். மேலே இருக்கும் ஐடியா மட்டும் இல்லாமல் இன்னும் பல வாய்ப்புகள் நம்மை சுற்றி இருக்கிறது. உங்களுக்கு சிறிய முதலீட்டில் தொழில் செய்ய விருப்பம் இருந்தால் இந்த லிங்க்-ஐ கிளிக் செய்து பார்க்கவும்.

Small Business Ideas in Tamil

Leave a comment